வடக்கில் மிதமான மழை கிடைக்க வாய்ப்பு
weather
sri lanka
north
alert
Nagamuthu Pradeeparaja
By Vanan
Courtesy: Nagamuthu Pradeeparaja
வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று மிதமான மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா ( Nagamuthu Pradeeparaja) கூறியுள்ளார்.
இன்று 10.02.2022 வியாழக்கிழமை முதல் 13.02.2022 ஞாயிற்றுக்கிழமை வரை மழை தொடலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது.
எனவே நெல் மற்றும் வெங்காய அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளும் விவசாயிகள் முன்கூட்டியே திட்டமிட்டு அறுவடை செயற்பாடுகளை மேற்கொள்ளுவது நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

