கடற்றொழிலாளர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அறிக்கை
வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளுக்கு பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி, இந்த எச்சரிக்கை இன்று (25.09.2026) இரவு 10.00 மணி வரை செல்லுபடியாகும் என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தெற்கு ஒடிசா பிராந்தியத்தை அண்மித்து நிலவிய தாழமுக்கம், வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் பயணித்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசமாக வலுவிழந்தது.
கடற்றொழிலாளர்கள்
இது அடுத்த 24 மணித்தியாலங்களில் மேலும் வடக்கு நோக்கி நகர்ந்து வடமேற்கு திசையில் பயணித்து படிப்படியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலையில் குறித்த கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழில் படகுகள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பலத்த காற்று வீசக்கூடிய பகுதிகளில் பயணிக்கும் படகுகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வானிலை நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பில் மக்கள் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு கடற்றொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |