10 வருடங்களின் பின்னர் சிறிலங்காவில் ஏற்பட்ட பாதகமான மாற்றம் - அரசு எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை
Sri Lanka
Weather
By Pavan
இலங்கையில் சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் வளிமண்டலத்தில், அதிகளவான மாசு நேற்று படிந்ததாக மத்திய சுற்றாடல் அதிகாரச் சபை தெரிவித்துள்ளது.
மெண்டௌஸ் சூறாவளியினால் இந்தியாவில் இருந்து அதிகளவான மாசுகள் இலங்கையை சூழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் சஞ்ஜய ரத்நாயக்க குறிப்பிட்டார்.
இதன் காரணமாக நாடளாவிய ரீதியில், அதிக குளிருடனான வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தூசுப் படிமங்கள் இன்று முதல் குறைவடையும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மாலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்