1ம் திகதி இலங்கையை நெருக்கும் புதிய காற்றழுத்தம் - வெளியாகிய எச்சரிக்கை
TN Weather
Weather
By Kiruththikan
தென்கிழக்கு வங்கக்கடலில் இன்று காலை உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் வாய்ப்பு அதிகம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது நாளை, ஜனவரி 28ஆம் திகதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும்.
அதன்பின்னர், அது படிப்படியாக மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து எதிர்வரும் முதலாம் திகதி இலங்கையின் கிழக்குக் கரையை அடையக்கூடும்.
காற்றின் வேகம் 40-45 கி.மீ
இதன்போது காற்றின் வேகம் மணிக்கு 40-45 கி.மீ ஆக இருக்கும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்பரப்புகளுக்கு மேல் பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன், கடலும் கொந்தளிப்பாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 40 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி