மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரரிடம் துப்பாக்கி முனையில் உடமைகள் கொள்ளை
Cricket
West Indies cricket team
South Africa
By Laksi
தென் ஆபிரிக்காவில், மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் பேபியன் அலனிடம் துப்பாக்கி முனையில் கொள்ளையிடப்பட்டுள்ளது.
பேபியன் அலன் தற்பொழுது தென் ஆபிரிக்காவில் நடைபெற்று வரும் SA20 2024 போட்டித் தொடரில் விளையாடி வருகின்றார்.
இந்தப் போட்டித் தொடரில் பேர்ல் றோயல்ஸ் கழகத்தின் சார்பில் விளையாடி வருகின்றார்.
எவ்வித காயங்களும் ஏற்படவில்லை
இந்நிலையில், ஜொஹனர்ஸ்பேர்க்கில் உள்ள ஹோட்டலுக்கு எதிரில் வைத்து துப்பாக்கி முனையில் அவரது உடமைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதில் அலைபேசி, தனிப்பட்ட பொருட்கள் அடங்கிய பை உள்ளிட்டனவற்றை ஆயுததாரிகள் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், இந்த கொள்ளைச் சம்பவத்தின் போது பேபியனுக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்