வடக்கு ஈர நில விவகாரம்...! அரசாங்கத்தை கடுமையாக சாடிய அர்ச்சுனா எம்பி
Sri Lanka Politician
Northern Province of Sri Lanka
National People's Power - NPP
Ramanathan Archchuna
By Thulsi
வடக்கில் உள்ள ஈர நிலங்களைச் சுவீகரிக்க முயற்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
இதேவேளை தெற்குப் பகுதியில் உள்ள ஈர நிலங்களைப் அரசாங்கம் பாதுகாத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் நேற்றைய (03.02.2026) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பாரபட்சமான செயற்பாடுகள்
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தெற்கு மாகாணங்களில் அமைந்துள்ள ஈர நிலங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் விசேட அக்கறை காட்டி வருகின்றது.

இருந்தபோதிலும், வடக்கு மாகாணத்தில் உள்ள ஈர நிலங்களை அரசாங்கம் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர (சுவீகரிக்க) முயற்சிப்பதாகக் குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் இவ்வாறான பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து தனது கண்டனத்தையும் அவர் பதிவு செய்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி