நான் ரணிலின் ‘கோட்’ அல்ல : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க வெளிப்படை
நான் ரணிலின்(ranil) கோட் அல்ல என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(prasanna ranatunga) தெரிவித்துள்ளார்.
கட்சி பிளவுபட்டால் யாருக்கு இலாபம் என்பது நன்றாக தெரியும் என்றாலும் மே 9 அன்று நடந்ததை மீண்டும் நடக்க அனுமதிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
கலந்துரையாடலில் கலந்து கொண்ட எம்.பிக்கள்
இரத்தினபுரி மாவட்ட பொதுஜன பெரமுனவின் மக்கள் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று (3) இரத்தினபுரியில் உள்ள ஹோட்டலில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புரவினால் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரத்தினபுரி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் எட்டு மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் இந்த கலந்துரையாடலுக்கு வருகை தந்திருந்தனர்.
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கம்புர(Janaka Vakkambura), இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர(Premalal Jayasekara), இரத்தினபுரி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அகில எல்லாவல(Akila Ellawala) மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முதித பிரியசாந்தி(Mudita Priyashanthi) ஆகிய நால்வரே கலந்து கொண்டனர்.
யாருக்கு ஆதரவு குழப்பத்தில் பவித்ரா
மொட்டுவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதிநிதி ஜோன் செனவிரத்ன(John Seneviratne) ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார(Vasudeva Nanayakkara) தற்போது சுகயீனமுற்றிருப்பதால் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை. சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் இரத்தினபுரி மாவட்டத் தலைவர் பவித்ரா வன்னியாராச்சி(Pavitra Vanniarachchi,), யாருக்கு ஆதரவளிப்பது என்பதில் இன்னமும் குழப்பத்தில் இருப்பதாகத் தெரியவருகிறது.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான இரத்தினபுரி மாவட்ட மாகாண சபையின் ஆறு முன்னாள் உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதுடன், உள்ளூராட்சி மன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 160 உறுப்பினர்களில் 150 பேர் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |