றம்புக்கனை கோரத்தாண்டவம்!! வெளிவரும் உண்மைகள்
றம்புக்கனை போராட்டத்தின் போது காரணமின்றி காவல்துறையினர் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொள்ளாமல் இருந்திருந்தால் ஒரு துளி இரத்தம் சிந்தியிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்காது என சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டு தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் அவர், ஆர்ப்பாட்டத்தின் போது வன்முறையை தூண்டிவிட்டது காவல்துறையினரே எனத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய சம்பவம் குறித்து மேலும் தெரிவித்த அவர்,
வீதிகள் மறைக்கப்பட்ட போதிலும் ஆரம்பம் முதல் அமைதியான போராட்டம் ஒன்றே முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பகல் உணவு சமைத்து அமைதியாக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோம். அங்கிருந்த காவல்துறையினருக்கும் கேக் வழங்கியிருந்தோம். எனினும் கண்ணீர் புகைப் பிரயோகம் மேற்கொண்டமையினால் இந்த நிலைமை ஏற்பட்டது.
இதற்கு காவல்துறையினரே பொறுப்புக் கூற வேண்டும். மக்களின் வயிற்றை நோக்கியே துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டிருந்தார்கள். காவல்துறையினரின் துப்பாக்கிகள் குறி வைத்தமை தொடர்பில் சந்தேகமாகவே உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
