தமிழர்களை இலக்குவைத்து RAW-வின் முக்கிய திட்டம்!
திட்டமிட்ட ரீதியில் இந்தியாவின் (India) ரோ அமைப்பும் இலங்கையின் (Sri Lanka) முன்னாள் தமிழின படுகொலையாளிகளும் சேர்ந்து ஒரு சர்வதேச வலை சதி ஒன்றினை மீண்டும் பின்னிக் கொண்டிருக்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) தெரிவித்துள்ளார்.
முன்னாள் கடற்படை அட்மிரால் கைது செய்யப்பட்டமை தொடர்பில் அரசியல் கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்து மனு ஒன்று கையளித்தது.
இது தொடர்பில் தனது சமூக ஊடக பக்கத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
கடற்படை அட்மிரல்
இதன்போது,“திருகோணமலையில் கொல்லப்பட்ட தமிழ் மாணவர்களுக்கான வழக்கில் கடற்படை அட்மிரல் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
எனினும் பொய்யான காரணங்களை கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள அரசியல் கட்சி ஒன்று ஜனாதிபதியிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது.
இது பலிவாங்கும் செயல் என்று அந்த கட்சி வெளிப்படுத்துகிறது.
அரகலய ஆர்ப்பாட்டத்தின்போது கோட்டாபயவை பாதுகாத்தார் என்பதற்கான பலிவாங்கும் செயற்பாட்டையே அரசாங்கம் செய்வதாக அந்த கட்சி கூறுகிறது.
இதனாலேயே அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள்
மேலும், மீண்டும் தமிழீழ விடுதலை புலிகள் உருவாக்கப்படுவதாக அதற்கு அநுர அரசாங்கம் திட்டமிட்ட ரீதியில் உதவி செய்வதாக இந்த அரசியல் கட்சி குற்றம் சாட்டுகிறது” என்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அர்ச்சுனா, இதன் பின்னணியில்தான் அண்மையில் மீண்டும் தேசிய தலைவரை மறக்க செய்து அடுத்த தலைவரை கொண்டு வந்து சுவிசிலும் திட்டமிட்ட ரீதியில் இந்தியாவின் ரோ அமைப்பும் இலங்கையின் முன்னாள் தமிழின எதிர்ப்பாளர்களும் சேர்ந்து ஒரு சர்வதேச வலை சதி ஒன்றினை பின்னிக் கொண்டிருக்கிறார்கள் எனவும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
