‘குடி’ மக்களுக்கு அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக மதுபான உற்பத்தி நிறுத்தப்படும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் மற்றும் அதனை அடிப்படையாகக் கொண்ட ஊடகங்களில் வெளியான செய்திகள் பொய்யானவை என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக போதிய எத்தனோல் உற்பத்தி செய்யப்படாமை காரணமாக மார்ச் 22ஆம் திகதி முதல் மதுபான உற்பத்தி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் கலால் ஆணையாளர் (சட்ட அமுலாக்கல்) கபில குமாரசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் பரவியிருந்தன.
எனினும் இவ்வாறான செய்தி பொய்யானது என்று அவர் வலியுறுத்தினார். குமாரசிங்க மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் 23 கலால் உரிமம் பெற்ற மதுபான உற்பத்தி நிலையங்கள் அரக்கு உட்பட உள்ளூர் மதுபானங்களை உற்பத்தி செய்வதாகவும், எத்தனோல் உட்பட தேவையான மூலப்பொருட்கள் உள்ளுர் சந்தையில் கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
இவ்வாறானதொரு பின்னணியில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான டீசல், எரிவாயு, பால் மா, மருந்துகள் உள்ளிட்ட பல அத்தியாவசியப் பொருட்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர்.
