சமூக வலைத்தளத்தில் உண்மைக்கு புறம்பான செய்தி! 24 வயது இளைஞன் கைது
Sri Lanka Police
Colombo
Sri Lankan protests
Sri Lanka Police Investigation
By Kiruththikan
இலங்கையில் கடந்த மே மாதம் 09ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் சமூக ஊடகங்கள் ஊடாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படும் சந்தேக நபர் வாட்ஸ்அப் மூலம் தவறான தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது
காவல் திணைக்களத்தின் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் நேற்று கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் கடுவெல பிரதேசத்தில் வசிக்கும் 24 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.