வாட்ஸ்அப்பின் புதிய ரகசியப் பாதுகாப்பு அம்சம் : என்னனு தெரியுமா?
உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் (WhatsApp) புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.
மெட்டா (Meta) நிறுவனத்திற்கு சொந்தமான பிரபலமான குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் பயனர்களுக்காக புதிய தனியுரிமை அம்சத்தை உருவாக்கியுள்ளது.
இந்த புதிய அம்சம் உரையாடல்களில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலதிக பாதுகாப்பு
அதன்படி பயனர்களின் தனிப்பட்ட உரையாடல்களுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கில் ஆங்கிலத்தில் Advanced Chat Privacy எனப்படும் மேம்பட்ட அரட்டை தனியுரிமையை அறிமுகம் செய்துள்ளது.
பயனர்கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தானாகவே பெறுநரின் கேலரியில் சேமிக்கப்படுவதை கட்டுப்படுத்த இது உதவும்.
இதுமட்டுமின்றி, முழு சாட் வரலாற்றையும் ஏற்றுமதி செய்வதை தடுப்பது மற்றும் இன்னும் பல தனியுரிமை சார்ந்த கட்டுப்பாடுகளையும் இந்த அம்சம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
