அமெரிக்காவில் 249 பேருடன் பறந்த விமானத்திலிருந்து கழன்று வீழ்ந்த சக்கரம்
அமெரிக்காவில் பறந்துகொண்டிருந்த சர்வதேச விமானத்தின் சக்கரமொன்று கழன்று வீழ்ந்த சம்பவம் நேற்று (07) இடம்பெற்றுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜப்பானை நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயார்லைன்ஸ் விமானமொன்றிலிருந்தே இவ்வாறு சக்கரம் கழன்றுள்ளது.
போயிங் 777 ரகத்தைச் சேர்ந்த குறித்த விமானம் தரையிலிருந்து புறப்பட்ட நிலையில் அதன் சக்கரமொன்று கழன்று, விமான நிலையத்தின் வாகனத் தரிப்பிடப் பகுதியில் வீழ்ந்தது.
249 பேருடன் பயணித்த விமனம்
இதனையடுத்து குறித்த விமானம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜப்பானின் ஒசாகா நகரை நோக்கி புறப்பட்ட அவ்விமானத்தில் 249 பேர் இருந்தனர் என யுனைடெட் எயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போயிங் 777 விமானத்தின் ஒவ்வொரு சக்கரத் தொகுதியிலும் 6 சக்கரங்கள் இருப்பதாகவும், ஏதேனும் ஒரு சக்கரம் சேதமடைந்தால் அல்லது தொலைந்தாலும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கக் கூடிய வகையில் அவ்விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக யுனைடெட் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |