சிக்காமல் தப்பிய மகிந்தவும் நாமலும் - குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் சந்தேக நபர்கள்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோரின் பெயர்கள் கடந்த 9ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலில் நேரடியாக பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கான பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து தென்னிலங்கை ஊடகங்கள் காவல்துறையினரை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 9ஆம் திகதி வெடித்த வன்முறை தொடர்பில் 22 பேரை கைது செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
அந்த 22 பேரின் பெயர் விபரம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் மகிந்த ராஜபக்ச மற்றும் நாமலின் பெயர் உள்ளடங்கவில்லை என தெரியவந்துள்ளது.
1. சதா எனப்படும் மாலக விஜேசிங்க
2. மிலன் ஜயதிலக்க (நாடாளுமன்ற உறுப்பினர்)
3. பந்துல ஜயமான்ன
4. தினேஷ் கீதக
5. சமன்லால் பெர்னாண்டோ (மொரட்டுவை மேயர்)
6. சனத் நிஷாந்த (நாடாளுமன்ற உறுப்பினர்)
7. அரபி வசந்த
8. தேசபந்து தென்னகோன் (சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்)
9. சுபாஷ் (தெஹிவளை நகர சபை)
10. அமல் சில்வா
11. சமீர சதுரங்க ஆரியரத்ன
12. ருவன்வெல்ல ரமணி
13. துசித ரணபாஹு
14. சஜித் சாரங்க
15. மஹிந்த கஹந்தகம
16. டேன் பிரியசாத்
17. புஷ்பலால் குமாரசிங்க
18. சஜீவ எதிரிமான்ன (நாடாளுமன்ற உறுப்பினர்)
19. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (நாடாளுமன்ற உறுப்பினர்)
20. நிஷாந்த மெண்டிஸ் (மொரட்டுவ)
21. புஷ்பகுமார (முன்னாள் இராணுவ அதிகாரி)
22. ஷவீன் பெர்னாண்டோ (வென்னப்புவ)
ஆகியோரின் பெயர்களே அந்த பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலிலுள்ள சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு குளிரூட்டப்பட்ட அறைகளும் உண்பதற்கு ப்ரைட் ரைஸ் வழங்கப்படுவதாகவும் குறித்த ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
