உலகில் அதிக மில்லியனர்களை கொண்ட நாடு எது தெரியுமா !
மில்லியனர்களின் எண்ணிக்கையில் மிக வேகமாக வளர்ச்சியை கண்டுள்ள நாடுகளில் தைவான் (Taiwan) முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம், UBS குளோபல் வெல்த் ரிப்போர்ட் 2024 இன் அறிக்கையின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், பாரம்பரிய நிதி மையங்களிலிருந்து புதிய பிராந்தியங்களுக்கு செல்வம் வேகமாக மாறி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நிலையான பொருளாதாரம்
இந்தநிலையில், நாட்டில் இப்போது 760,000 மில்லியனர்கள் உள்ள நிலையில், மேலும் சராசரி வயது வந்தோர் செல்வம் 312,000 டொலருக்கும் அதிகமாக உள்ளது.
தைவானின் வளர்ச்சிக்கு வலுவான தொழில்நுட்பத் துறை மற்றும் நிலையான பொருளாதாரம் உந்துதலாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டியலில் இரண்டாவது இடத்தில் துருக்கி உள்ளதுடன் இது ஒரு வருடத்தில் 7,000 மில்லியனர்களைச் சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டு வாய்ப்புகள்
இது 8.4 வீத அதிகரிப்பை காட்டுவதாகவும் நாட்டில் இப்போது 68,000 மில்லியனர்கள் உள்ளதுடன் மேலும் இந்த எண்ணிக்கை 2028 ஆம் ஆண்டுக்குள் 87,000 ஐ எட்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்திய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் கஜகஸ்தான், இந்தோனேசியா, தென் கொரியா, இஸ்ரேல், மெக்சிகோ மற்றும் தாய்லாந்து போன்ற பல ஆசிய நாடுகளும் அடங்கும் என தெரிவிக்க்பபட்டுள்ளது.
ஐரோப்பாவில், ஸ்வீடன் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் - திருவிழா
