வெளிநாடு செல்ல கட்டுநாயக்க வந்தவர் தப்பியோட்டம்
வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் வந்தவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் கைது செய்யப்பட்டநிலையிலேயே தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குற்றச்செயல்களுடன் தொடர்பு
டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடகப் பேச்சாளரின் அறிவிப்பு
இவ்வாறுதப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய காவல் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு காவல்துறை கான்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
