பிள்ளையானைக் காட்டிக் கொடுத்தது இவரா? அதிர்ச்சியில் பிள்ளையான் குழு உறுப்பினர்கள்

Sri Lanka Army Batticaloa Pillayan
By Independent Writer May 31, 2025 08:06 AM GMT

பிள்ளையான் இன்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிள்ளையானின் அலுவலகம் சுற்றி வளைக்கப்பட்டு பாரிய தேடுதல் வேட்டைகள் நடைபெறுகின்றன.

பிள்ளையானின் 27 அலுவலக முன்னாள் பொறுப்பாளர்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றார்கள் அல்லது கைது செய்யப்பட்டு வருகின்றார்கள்.

முன்னரைப் போல சட்டவிரோதமாக இத்தனை காரியங்களும் நடைபெறவில்லை. சட்டப்படி தான் பிள்ளையான் மீதும், TMVPயினர் மீதும், காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றார்கள்.

பிள்ளையான் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற நீதிக்குப் புறம்பான காரியங்கள் அத்தனையுமே - பிள்ளையான் விவகாரத்தை விசாரணைகள் செய்து வருகின்ற புலனாய்வுப் பிரிவினருக்கு தெளிவாகத் தெரிந்திருக்கின்றது.

பிள்ளையான் குழுவினரால் கொலை செய்யப்பட்டவர்களது சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள், எந்தெந்த இடங்களில் சடலங்கள் மற்றும் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டிருக்கின்றன, ‘ரிப்போலி பிளட்டுன்’ என்ற பெயரில் பிள்ளையான் குழு மேற்கொண்ட கடத்தல்கள் என்ன - அத்தனை தகல்களும் துல்லியமாக அரச புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.

யார் இந்தத் தகவல்களை வழங்கி வருகின்றார்கள் என்பது TMVP உறுப்பினர்களுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியாகவே அண்மைக்காலமாக இருந்து வந்தது.

பிள்ளையான் மற்றும் பிள்ளையான் குழுவின் அனைத்து சட்டவிரோத செயற்பாடுகள் பற்றி அரச புலனாய்வாளர்களுக்குத் தகவல்களை வழங்கிக்கொண்டிருப்பது - பிள்ளையானுடைய நெருங்கிய சகா என்று தற்பொழுது அறியக் கிடைக்கின்றது.

மட்டக்களப்பு ஓட்டைமாவடியைச் சேர்ந்த அந்த நபர், மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் கீழ் பிள்ளையானுடன் சிறைச்சாலையில் ஐந்து வருடங்களாக இருந்ததுடன், பிள்ளையானுடன் இணைந்து பல குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவருடன் இணைந்து செயற்பட்ட மற்றொரு முன்நாள் ‘ரிபோலிப் பிளட்டூன்’ உறுப்பினர் அரச படைகளின் சாட்சியாளராக மாறியதைத் தொடர்ந்து, இவரும் தற்பொழுது அரசதரப்பின் சாட்சியாக மாறி, பிள்ளையான் மேற்கொண்ட பல குற்றச்செயல்கள் பற்றிய தகவல்களை அரச புலனாய்வாளர்களுக்குக் கூறிவருவதாகத் தெரியவருகின்றது.

குறிப்பாக, பிள்ளையான் தரப்பினர் மேற்கொண்ட படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கின்ற இடங்கள், பிணங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ள இடங்கள், இராணுவ அதிகாரிகளுக்கு இருக்கின்ற தொடர்புகள் - இப்படி பல இரகசியங்களை புலனாய்வுப் பிரிவினரிடம் குறிப்பிட்ட இந்த நபர் வெளியிட்டுவருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிள்ளையான் குழுவினரால் கொல்லப்பட்டவர்கள், கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள், கொள்ளையடிக்கப்பட்வர்களுக்கான நீதி - காலம் கடந்துவிட்டபோதும் கிடைக்க ஆரம்பித்திருப்பது பற்றி மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டுவருகின்றார்கள்.  


பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட 15 அமைப்புகளுக்குத் தடை : வெளியான புதிய வர்த்தமானி

தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் கொடூரமாக அடித்து கொலை

தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் கொடூரமாக அடித்து கொலை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026