தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் கொடூரமாக அடித்து கொலை

Sri Lanka Police Crime Branch Criminal Investigation Department Crime Death
By Thulsi May 31, 2025 02:03 AM GMT
Report

அம்பாறை (Ampara) - பெரிய நீலாவணை காவல்துறை பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த குடும்பப் பெண் நேற்று கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார்.

கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பப் பெண்ணின் சடலம் பெரிய நீலாவணை காவல்துறையினரால் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

38 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தாயான மனோதர்ஷன் விதுஷா என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பேருந்து சில்லில் சிக்கி 3 வயது சிறுவன் பலி

பேருந்து சில்லில் சிக்கி 3 வயது சிறுவன் பலி

ஆரம்பக்கட்ட விசாரணை

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் மீது கழுத்து மற்றும் தலை உள்ளிட்ட பகுதியில் காயங்கள் ஏற்பட கூடிய வகையில் அடித்து தாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் கொடூரமாக அடித்து கொலை | Woman Beaten To Death In Ampara

மரணமடைந்த குடும்ப பெண்ணின் கணவர் வெளிநாடு ஒன்றில் தொழில் நிமித்தம் தங்கியுள்ளதாகவும் சம்பவம் நடைபெற்ற வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமராவின் காணொளிகளை சேமிக்கும் கருவி (DVR) கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குறித்த பெண் அவரது வீட்டில் அடித்து படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் சம்பவ இடத்திற்கு சென்று மேற்பார்வை செய்திருந்தார்.

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

பிள்ளையான் அலுவலகத்திற்குள் பிணங்கள்? மட்டக்களப்பில் வேகமாகப் பரவும் செய்திகள்!!

பிரேத பரிசோதனை

இந்த கொலை சம்பவம் தொடர்பில் அம்பாறை தடயவியல் காவல்துறையினர் ஸ்தலத்திற்கு வருகை தந்து மோப்பநாய் உதவிகளுடன் சந்தேக நபர்கள் தடயங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தமிழர் பகுதியில் பயங்கரம் - வீடொன்றில் குடும்பப் பெண் கொடூரமாக அடித்து கொலை | Woman Beaten To Death In Ampara

மேலும் சம்பவம் இடம்பெற்ற வீட்டிற்கு வருகை தந்த கல்முனை நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுத்தீன் மரண விசாரணைகளை மேற்கொண்டதுடன் உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அம்பாறை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொலை சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை பெரிய நீலாவணை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

You may like this 


யாழில் சோகம் : பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தை பலி

யாழில் சோகம் : பிறந்து மூன்று மாதங்களேயான பெண் குழந்தை பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026