அடுத்த தேர்தலில் மொட்டுக் கட்சி தோற்கும் - அடித்து கூறும் சம்பிக்க ரணவக்க
இலங்கையில் இடம்பெற்ற 2020ஆம் ஆண்டுபொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலையை போன்றே எதிர்வரும் தேர்தலில் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஏற்படும் என 43ஆம் படையணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேலும் "இலங்கையில் சம்பிரதாய கட்சிகளுக்கு மக்கள் எழுச்சியுடன் முடிவு கட்டப்பட்டுள்ளது. அக்கட்சிகளின் உறுப்பினர்கள் என்னதான் நினைத்தாலும் மக்களின் ஆணை இனி கிடைக்கப்போவதில்லை.” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் (2022) ஜூலை 9ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச மட்டுமல்ல இலங்கையின் சம்பிரதாய கட்சிகளும் அரசியல் ரீதியில் தோற்கடிக்கப்பட்டன.
அடுத்த அதிபர் வேட்பாளர்
அதேவேளை எதிர்க்கட்சியும் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை. இதனால்தான் மக்கள் தாமாகவே வீதிக்கு இறங்கி ஆட்சியாளர்களை விரட்டியடித்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அடுத்த அதிபர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் மொட்டுக் கட்சி இன்னும் அறிவிப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில் 2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட நிலைமையே எதிர்வரும்
தேர்தலில் மொட்டு கட்சிக்கும் ஏற்படும்" என தெரிவித்துள்ளார்.