அல்-ஷிஃபா வைத்தியசாலை : உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை வளாகத்திற்குச் சென்று நிலைமைகளை அவதானித்த பின்னர் அந்த வைத்தியசாலை ஒரு "மரண வலயம்" என்று விவரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் தலைமையிலான ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டுக் குழு, இஸ்ரேலிய இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட மற்றும் வைத்தியசாலையிலிருந்து நோயாளிகள் உட்பட அனைவரும் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையை ஒரு மணி நேரம் மதிப்பீடு செய்தது.
மருத்துவமனையின் நுழைவாயிலில் புதைகுழி
ஷெல் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடந்ததற்கான ஆதாரங்களைக் கண்டதாகவும், மருத்துவமனையின் நுழைவாயிலில் ஒரு புதைகுழியை அவதானித்ததாகவும் குழு கூறியது.அதில் 80 பேரின் உடல்கள் இருப்பதாக கூறப்பட்டது.
போர்நிறுத்தத்திற்கும் அழைப்பு
இஸ்ரேலிய இராணுவத்தால் வெளியிடப்பட்ட வெளியேற்ற உத்தரவுகளைத் தொடர்ந்து, 300 மோசமான நோயாளிகள் அல்-ஷிஃபாவில் உள்ளனர்.
மீதமுள்ள நோயாளிகள் மற்றும் ஊழியர்களை அவசரமாக காசாவில் உள்ள மற்ற வைத்தியசாலைகளுக்கு வெளியேற்ற ஏற்பாடு செய்ய முயற்சிப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியது, மேலும் மீண்டும் மீண்டும் போர்நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |