யாருக்கு ஆதரவு..! விடுதலை பெற்ற ரஞ்சன் வெளியிட்ட தகவல்
தான் அரசியலில் ஈடுபடுவேன் எனவும் தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று அதிபரின் விசேட பொது மன்னிப்பைப் பெற்று வெளியேறும் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே ரஞ்சன் ராமநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் பதில் வழங்கிய அவர், நான் சுதந்திரமாகவும் மக்கள் பக்கமுமே இருப்பேன்.
இந்த நாட்டின் அப்பாவி மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நான் தொடருவேன் என்றார்.
நேற்று சத்தியக்கடதாசி மூலம் தனது குற்றங்களை ஏற்றுக்கொண்டு மன்னிப்பைக் கோரிய நிலையில், இன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் மனுஷ நாணயக்கார உள்ளிட்ட நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் அவர் விடுதலை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
பொது மன்னிப்பில் விடுதலையானார் ரஞ்சன் ராமநாயக்க..!
விடுதலையாகிய ரஞ்சனுக்கு புதிய பதவி..!மனுஷ நாணயக்கார அறிவிப்பு

