விடுதலையாகிய ரஞ்சனுக்கு புதிய பதவி..!மனுஷ நாணயக்கார அறிவிப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை உலகளவில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர் நலனை மேம்படுத்துவதற்கான நல்லெண்ண தூதுவராக நியமித்துள்ளார்.
இது வெளிநாட்டு வேலைவாய்ப்பில் அவரது மறைமுக அறிவைப் பயன்படுத்துவதற்கான ஒரு தன்னார்வ நிலை என அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
I just offered @RamanayakeR a position as a goodwill ambassador to promote Sri Lankan migrant worker welfare globally upon his release and he gladly accepted. This is a voluntary position to make use of his tacit knowledges in the area of foreign employment pic.twitter.com/Zqz7BqcNMz
— Manusha Nanayakkara (@nanayakkara77) August 26, 2022
நீதிமன்ற அவமதிப்பின் காரணமாக 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இனி வரும் காலங்களில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையையோ அல்லது நடவடிக்கையையோ மேற்கொள்ள வேண்டாம் என அதிபர் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் விடுதலையாகும் ரஞ்சன் ராமநாயக்கவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குள் அழைத்து செல்வதாக சஜித் தெரிவித்திருந்த நிலையில், ரஞ்சனுக்கு நல்லெண்ண தூதுவர் பதவியை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

