ரணில் யாருடைய அதிபர் வேட்பாளர்
Palitha Range Bandara
Ranil Wickremesinghe
UNP
By Jaso
ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் அல்ல, நாட்டின் அதிபர் வேட்பாளர் என ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க யாருடைய அதிபர் வேட்பாளர் என ஊடகவியலாளர்கள் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாட்டின் சொந்த வேட்பாளர்

எதிர்வரும் அதிபர் தேர்தலில் நாட்டின் சொந்த வேட்பாளர் ரணில் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் ரங்கே பண்டார குறிப்பிட்டுள்ளார்.
பிடகோட்டை, சிறிகொத்தவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.