இஸ்ரேல் மீது ஈரான் ஏன் தாக்குதல் நடத்தவில்லை..!(காணொளி)
ஹாமாஸை தாக்கும் இஸ்ரேல் மீது ஈரான் எப்பொழுது தாக்குதல் நடத்தும் என்ற கேள்வி பலராலும் எழுப்பப்பட்டு வருகிறது.
இஸ்ரேல் யுத்தம் ஆரம்பித்து மூன்று வாரம் கடந்துவிட்ட நிலையில் இஸ்ரேலை நோக்கி கடுமையான எச்சரிக்கைகளை தொடர்ந்து விடுத்து வருகின்ற ஈரான் இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலை மேற்கொள்ளலாம் என பரவலாக பேசப்பட்டு வந்தது.
நேரடியாக அல்லது லெபனானில் உள்ள ஹமாஸ் அமைப்பினரை ஏவியாவது இஸ்ரேலை ஈரான் தாக்கும் என பல ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தார்கள்.
குறிப்பாக காசா மீதான இஸ்ரேலிய படைகளின் தரைவழி தாக்குதல்கள் ஆரம்பமான போது வடக்கு இஸ்ரேலின் எல்லைகளில் நிலைகொண்டுள்ள ஈரானின் துணை இராணுவமான ஹமாஸ் இஸ்ரேல் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்று எதிர்வு கூறப்பட்டு வந்தது.
ஆனால் காசா மீது இஸ்ரேல் தரைவழி யுத்தத்தை ஆரம்பித்து ஏழு நாட்கள் கடந்து விட்ட நிலையிலும் இஸ்ரேல் மீது எந்தவித பாரிய தாக்குதல்களையும் ஹமாஸ் இது வரை மேற்கொள்ளவில்லை.
இவ்வாறான சூழலில் ஹமாஸிற்கு ஆதரவாக செயற்படும் ஈரான் இஸ்ரேல் மீது தனது தாக்குதல்களை நடத்தாதது ஏன் என்ற கேள்விக்கு போர் நிலைப்பாடுகளை எடுத்துக் கூறுகிறது இந்த நிதர்சனம் நிகழ்ச்சி