கைது செய்யப்படுவாரா மகிந்த - உச்ச நீதிமன்றை நாடிய கட்சிகள்
National Peoples Party
SJB
Sri Lanka
Supreme Court of Sri Lanka
By Sumithiran
உயர் நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பாக நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவை தண்டிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் தனித்தனியாக மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று செவ்வாய்க்கிழமை (21) இந்த 2 மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிமன்ற அவமதிப்பு, மற்றும் தண்டனை
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்காக 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை நிறுத்தி வைப்பதைத் தடுத்து உயர் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை அவமதித்தமை குறித்தே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தை அவமதித்தமை, அவருக்கு தண்டனை வழங்குமாறு கோரியும் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்