20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு

Shreyas Iyer TNA S Shritharan Sri Lanka Economic Crisis Sri Lankan political crisis
By Vanan Jul 31, 2022 03:45 PM GMT
Report

நாடு அதளபாதாளத்திற்கு போக பிரதான காரணம்

40 வருடங்களுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்டுள்ள அதிபர் இந்த நாடு இப்படி பொருளாதார ரீதியில் அதளபாதாளத்திற்கு போவதற்கு பிரதான காரணமாக இருந்தது “ஒரு இனத்தின் மீது நடைபெற்ற போர்தான்” என்பதை புரிந்து வைத்திருப்பார்.

எம் மீது நடைபெற்ற இனவழிப்பின் பங்காளியாக இருந்தவர். எமது விடுதலைப் போராட்டத்தை சூழ்ச்சியால் பிரித்த தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் பொருளாதார நிலையை சீர் செய்ய வேண்டும் என்றால் முதலில் இனப் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

 அதிபர் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்

20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு | Will Talk To Ranil Tna Decision Sl Srisis

“ இந்த மண்ணிலே புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு இந்த நாட்டின் அதிபராக யார் இருந்தாலும் நாங்கள் பேசுவோம். அந்த வகையில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவோடும் நாம் பேசுவோம்.

அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 19 தடவைகள் பேசியிருக்கிறது. கோட்டாபய ராஜபக்ஷவுடன் ஒரு தடவை பேசியிருக்கிறது.

இவ்வாறு இந்த நாட்டில் யார் யார் எல்லாம் அதிபராக இருந்திருக்கிறார்களோ? அவர்களுடன் எல்லாம் தமிழர் தரப்பு பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அக்கிராசன உரையில் தமிழர்களின் பிரச்சினை வருமா?

20 தடவைகள் மௌனித்துப் போன இனப்பிரச்சினை விவகாரம்! கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு | Will Talk To Ranil Tna Decision Sl Srisis

ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 3 ஆம் திகதியன்று நாடாளுமன்றில் தனது அக்கிராசன உரையை நிகழ்த்தவுள்ளார். இவர் தனது அக்கிராசன உரையில் புரையோடிப்போயிருக்கிற இனப்பிரச்சினை தொடர்பில் கருத்து தெரிவிப்பாரா?

அல்லது முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச போன்று, மக்களால் விரட்டியடிக்கப்படும் வரை தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் ஒரு வார்த்தை கூட பேசாதது போன்று இவரும் செயற்படுவாரா? எனும் சந்தேகம் இப்போது எழுந்திருக்கிறது” என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்