ஹோர்முஸ் நீரிணை தொடர்பில் ட்ரம்ப் இன் அதிரடி அறிவிப்பு
உலகின் மிக முக்கியமான மற்றும் உணர்திறன் மிக்க கடல்வழிப் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடும் என்றும், அதனால் பயனடையும் நாடுகள் அந்த முக்கியமான நீர்வழியைப் பாதுகாத்து கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிற்குப் பணம் செலுத்த வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடக நிறுவனமொன்றிற்கு தொலைபேசி வாயிலாக அளித்த பேட்டியில்,, "அந்த நீரிணையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திறன் எங்களிடம் உள்ளது. நாங்கள் அதன் பாதுகாவலராக மாறுவோம். ஒருவேளை நாங்கள் அதை 'நீரிணைனை பாதுகாவல் தேவதை' என்று அழைப்போம்.மேலும் அந்த சேவைக்காக எங்களுக்குப் பணம் செலுத்தப்பட வேண்டும்," என்று தெரிவித்தார்.
முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதை
உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும்பகுதிக்கான ஒரு முக்கிய கப்பல் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணை, அமெரிக்க-ஈரான் மோதலில் ஒரு பதட்டமான இடமாக மாறியுள்ளது. ஈரான் அந்த நீர்வழியை முற்றுகையிட்டதால், எரிசக்தி விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன மற்றும் உலகளாவிய பணவீக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

"நாங்கள் அதைப் பாதுகாக்கிறோம். அதற்காக எங்களுக்கு நிறைய பணம் கொடுக்கப்படுகிறது. மற்ற நாடுகள் மிகவும் செல்வந்த நாடுகள். அவர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். எனவே அவர்கள் இதைச் செய்வார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது," என்று ட்ரம்ப் மேலும் கூறினார்.
சட்டவிரோதமாகக் கப்பல்கள் கடந்து செல்வதாகவும், அமைதியும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும் வரை அனுமதிகள் வழங்கப்படாது என்றும் கூறி, ஈரான் சனிக்கிழமையன்று அந்த நீர்வழியை மூடியது.
அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குகிறோம்
இது குறித்துக் கருத்து தெரிவித்த ட்ரம்ப், "நாங்கள் அவர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்திருந்தோம். ஆனால் அவர்கள் அதை மீறிவிட்டனர். அவர்கள் எப்போதும் ஒப்பந்தங்களை மீறுவார்கள். இப்போது அவர்களுடன் எங்களுக்கு சுமார் 10 ஒப்பந்தங்கள் உள்ளன. எனவே இந்த முறை நாங்கள் அவர்களை மிகவும் கடுமையாகத் தாக்குகிறோம்," என்றார்.

கடந்த வார இறுதி முதல், அமெரிக்க மற்றும் ஈரானியப் படைகளுக்கு இடையே கடுமையான ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடந்து வருகின்றன, மேலும் வளைகுடாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், ஹோர்முஸ் நீர்வழி தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால் உலக சந்தையில் எண்ணெய் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |