பாண்,பணிஸ் விலை குறையுமா - வெளியானது அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
எரிபொருளின் விலை குறைக்கப்பட்ட நிலையில் தற்போது பேருந்து மற்றும் ஓட்டோக்களின் கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.
எனினும் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலையை தற்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் குறைக்கப்பட்டபோது பேக்கரி உள்ளிட்ட உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கவோ குறைக்கவோ இல்லை .
முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, பேக்கரிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் பட்சத்தில் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கான சலுகையை மக்களுக்கு வழங்குவதற்காக பாண், கேக் மற்றும் பிற பேக்கரி பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்று தெரிவித்தார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி