தாய்வானின் புதிய அதிபராக பதவியேற்ற வில்லியம் லாய்
தாய்வானின் (Taiwan) புதிய அதிபராக வில்லியம் லாய் (William Lai Ching-te) பதவியேற்றுள்ளார்.
தைபேயில் உள்ள அதிபர் மாளிகையில் இன்று (20) கூட்டணி கட்சி ஆதரவுடன் பதவிப் பிரமாணம் நடைபெற்றது.
இந்த விழாவில் 8 நாட்டு தலைவர்கள், 51 சர்வதேச பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தாய்வான் உறுதி
கடந்த 1949ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரில் தாய்வான் தனி நாடாக பிரிந்தது.
ஆனால் தாய்வானை தனது நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிற நிலையில் தங்கள் நாட்டை தனி நாடாக நிலை நிறுத்துவதில் தாய்வான் உறுதியாக உள்ளது.
சீனாவுக்கு பின்னடைவு
1996ஆ ம் ஆண்டு முதல் தைவானில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. புதிய அதிபராக பதவி ஏற்றுள்ள லாங் சிங் டே சீனாவுக்கு எதிரான கொள்கையினை கொண்டவர். இவர் அதிபரானது சீனாவுக்கு ஒரு பின்னடைவாக கருதப்படுகிறது.
இந்நிலையில், இவரை ஆபத்தான பிரிவினைவாதி என சீனா குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |