ஈரான் அதிபரின் மறைவுக்கு இந்தியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியாவில் (India) துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
இதன்படி, இன்று (21) ஒரு நாள் அரசு துக்க தினமாக அனுஷ்டிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளதாவது, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் உள்ளிட்டோர் உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்தனர்.
துக்க தினம் அனுஷ்டிப்பு
இந்நிலையில், மறைந்த தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்தியா முழுவதும் இன்று (21) ஒரு நாள் அரசு துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியா முழுவதும் இன்று தேசியக் கொடி தவறாமல் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
மேலும், இன்றையதினம் அதிகாரபூர்வ கேளிக்கை நிகழ்ச்சிகள் எதுவும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் அதிபரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |