இந்திய பிரதமரிடம் பாதுகாப்பு கோரியுள்ள முன்னாள் அமைச்சர்
இந்திய பிரமதரிடம் பாதுகாப்பு
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இன்னும் உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதால், தான் மற்றும் தனது குடும்ப உறுப்பினர்களை இந்தியாவுக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பு வழங்குமாறு இந்திய பிரதமரிடம் கோரிக்கை விடுப்பதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விமலவீர திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு சம்பந்தமாக எந்த வகையிலும் தன்னால் திருப்தியடைய முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஏற்பட்டுள்ள இந்த நிலைமை காரணமாக பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பல்வேறு இடங்களில் ஒளிந்து வாழ்ந்து வருகின்றனர். 21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கவில்லை என்றால், கிராமங்களுக்கு வர முடியாது என ஓமல்பே சோபித தேரர் கூறியுள்ளார். தேரரின் இந்த கருத்து வன்முறைக்கு அழைப்பு விடும் செயல்.
நடுத்தெருவில் நிற்கும் நிலை
அரசியலில் ஐந்து சதத்தை கூட சம்பாதிக்காது, கஷ்டப்பட்டு வியர்வை சிந்தி சம்பாதித்த அனைத்தையும் கப்புட்டு காக்கா எனக் கூறிக்கொண்டு வந்த மிலேச்சத்தனமான சிலர், முற்றாக தீயிட்டு அழித்துள்ளனர்.
இதனால், நான் எதுவுமில்லாது நாட்டில் நடுத்தெருவுக்கு வந்த நபராக மாறியுள்ளேன். நாட்டில் நடந்த அனைத்து தாக்குதல்களின் பின்னணியிலும் மக்கள் விடுதலை முன்னணியே இருக்கின்றது எனவும் விமல்வீர திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
