மனைவிக்கு தங்கச்சங்கிலி வாங்கிய தமிழருக்கு அடித்த அதிர்ஷ்டம்
நகைக்கடையொன்றில் தனது மனைவிக்கு தங்கச் சங்கிலியை வாங்கிய தமிழர் ஒருவருக்கு குலுக்கல் பரிசு போட்டியில் இந்திய மதிப்பில் ரூபா 08 கோடி பரிசு விழுந்துள்ளது. இதனால் அவர் கடும் மகிழ்ச்சியில் உள்ளார்.
சிங்கப்பூரைச்(singapore) சேர்ந்த பொறியிலாளரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவருக்கே இந்த அதிஷ்டம் அடித்துள்ளது.
தங்கச் சங்கிலி கொள்வனவு
கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள நகை கடையொன்றுக்கு சென்று தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டொலர் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கினார்.
இந்தக் கடையில் குறைந்தது 250 சிங்கப்பூர் டொலருக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்காக குலுக்கல் பரிசை அந்தக் கடை நடத்தி வந்தது.
அந்த குலுக்கல் பரிசுப் போட்டியில் பாலசுப்பிரமணியம் பங்கேற்றார்.
குலுக்கல் பரிசில் அடித்த அதிஷ்டம்
தற்போது அவருக்கு அந்தக் குலுக்கலில் 10 லட்சம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடிக்கும் அதிகமானது இந்த பரிசுத்தொகை.
இந்த பரிசு கிடைத்தது குறித்து பாலசுப்பிரமணியம் சிதம்பரம் கூறியதாவது: இன்று என்னுடைய தந்தையின் 4-வது ஆண்டு நினைவு நாள். இந்தப் பரிசை அவரது ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன்.
இந்த தகவலை எனது தாய்க்குத் தெரிவித்து, அதில் ஒரு பகுதியை நான் சிங்கப்பூரில் தங்கியிருந்த பகுதியின் மேம்பாட்டுக்காக தானமாக தரப் போகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |