அநுர அரசின் உயர் பதவிகளுக்கான நியமனம் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
தற்போதைய அரசாங்கத்தின் ஆயுர்வேத திணைக்களம் (Department of Ayurveda) உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கான நியமனம் குறித்து குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறித்த உயர்பதவிகளுக்கு தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பில் (Colombo) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா (Vimukthi De Soysa) இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத சேவை
அத்துடன் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை உயர் பதவிகளுக்கு நியமிக்கும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் ஆயுர்வேத திணைக்களத்திலிருந்து ஆரம்பித்துள்ளதா? எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.
இவ்வாறான நியமனங்கள் ஊடாக அரச ஆயுர்வேத சேவை உள்ளடக்கிய அரச சேவையைக் கேள்விக்குறியாக்க வேண்டாம் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் நாடாளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |