உலகைக் குலைக்கும் பேராபத்து: இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஈரானின் பகிரங்க எச்சரிக்கை
எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல் கட்டுப்படுத்த முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும் என ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியன் (Masoud Pezeshkian) எச்சரித்துள்ளார்.
தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் தெற்கு பார்ஸ் (South Pars) எரிவாயு தளம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள்
இது குறித்து மேலும் தெரிவித்துள்ள அவர், “இத்தகைய ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அமெரிக்க - சியோனிச எதிரிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் எதனையும் பெற்றுத்தராது.
மாறாக, அவை நிலைமையை மேலும் சிக்கலாக்கும்.
I strongly condemn attacking Iran’s energy infrastructure. Such aggressive acts will yield nothing for the Zionist–American enemy & their supporters. This will complicate the situation & could have uncontrollable consequences, the scope of which could engulf the entire world. https://t.co/FGtTZZjA6Y
— Masoud Pezeshkian (@drpezeshkian) March 18, 2026
இது ஒட்டுமொத்த உலகத்தையும் பாதிக்கக்கூடிய கட்டுப்படுத்த முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக ஈரானின் முக்கியப் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தளபதிகள் கொல்லப்பட்டு வரும் நிலையில் தற்போது எரிசக்தி நிலையங்கள் இலக்கு வைக்கப்படுவது பிராந்தியத்தில் பெரும் போருக்கான அச்சத்தை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |