60 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்ற அதிர்ஸ்டசாலி..! பின்னணியில் வெளியாகிய எச்சரிக்கை
லொட்டோ
ஒன்றாரியோ மாகாணத்தில் சுமார் 60 மில்லியன் டொலர் பணப் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.
லொட்டோ ஜெக்பொட் லொத்தர் சீட்டிழுப்பில் இவ்வாறு பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றாரியோவின் ரிச்மன்ட்ஹில் பகுதியில் வெற்றிக்குரிய லொத்தர் சீட்டிலுப்பு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் பரிசுத் தொகை
இதே சீட்டிலுப்பில் 121440 டொலர்கள் பெறுமதியான இரண்டு இரண்டாம் பரிசுக்குரிய லொத்தர் சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
நாளைய தினம் நடைபெறவுள்ள ஜெக்பொட் சீட்டிலுப்பின் பரிசுத் தொகை 15 மில்லியன் டொலர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, லொத்தர் சீட்டிழுப்பு ஒன்றில் பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டால் அது குறித்து எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ளத் தேவையில்லை என பிரபல ஊடகவியலாளர் பெட்டி லோவிட் ரிய்ட் தெரிவித்துள்ளார்.
பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டது என அறிந்து கொண்ட உறவினர்கள், நண்பர்கள், தொண்டு நிறுவனங்கள் நிதியியல் தீர்மானங்களை எடுக்கும் போது அழுத்தங்களை பிரயோகிக்கக் கூடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எனவே பரிசுத் தொகை வென்றெடுக்கப்பட்டதன் பின்னர் நிதியியல் ரீதியான தீர்மானங்களை சரியான முறையில் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.
