இன்சுலின் இல்லாமல் இறக்கும் நிலையில் நீரிழிவு நோயாளிகள்
Sri Lanka
Hospitals in Sri Lanka
Diabetes
By Sumithiran
2 மாதங்களுக்கும் மேலாக பல அரச மருத்துவமனைகளில் நீரிழிவு நோயாளிகளுக்கு வழங்கப்படும் இன்சுலின் உள்ளிட்ட பல மருந்துகள் கிடைக்காததால் மருத்துவ மனை நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக கூறுகின்றனர்.
மத்திய மாகாணத்தில் மாத்திரம் பேராதனை, கண்டி, கம்பளை, நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பிரதான வைத்தியசாலைகளில் இரண்டு மாதங்களாக கிளினிக் நோயாளிகளுக்கு இன்சுலின் வழங்கப்படவில்லை என வைத்தியசாலை நோயாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதிக விலைக்கு விற்கப்படும் இன்சுலின்
100 மில்லிக்கு குறைவான சிறிய குப்பிகள் ரூ. இரண்டாயிரத்து அறுநூறுக்கும் மேல் விற்பளைனயாவதால், பல நோயாளிகளால் அதை வாங்க முடியவில்லை. இன்சுலின் பெறாததால் தமது உடல்நிலை மோசமடைந்துள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி