எக்னலிகொட வழக்கின் சாட்சிக்கு சிறைச்சாலையில் அச்சுறுத்தல் - நீதிமன்றம் விடுத்த உத்தரவு
சாட்சியாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள்
ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்ட வழக்கில் சாட்சியாளருக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் பொய்யான சாட்சியங்களை வழங்கியமைக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சுமதிபால சுரேஷ் என்ற சாட்சிக்கே இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, அது தொடர்பான அறிக்கையை அடுத்த நீதிமன்றத் தினத்தில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், சிறைச்சாலையில் உள்ள சாட்சியின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்டத்தரணிகளைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெறுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
விசாரணை எதிர்வரும் 18ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், அதுவரை சாட்சியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
