கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் பலி
கணவனின் நண்பரினால் தாக்கப்பட்ட குடும்பப் பெண் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட மஞ்சந்தொடுவாய் பகுதியில் வசிக்கும் 68 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த குறித்த மரணமான பெண் தனது வீட்டில் கணவருடன் தங்கி இருந்த நிலையில் கணவரின் நண்பரான சந்தேக நபருடன் ஏற்பட்ட வாய்த் தர்க்கத்தின் போது கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர் .

குறித்த சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட பதில் நீதவான் ஏ எல் முனாஸ் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டார்
சந்தேக நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக காத்தான்குடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! ' |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12