கொழும்பில் சிகிச்சைக்காக சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பெண்ணொருவருக்கு சிகிச்சையளிக்கும் போது அதிகளவு காபனீரொட்சைட் வாயு வழங்கப்பட்டமையால் உயரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு, அறுவை சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக செய்யப்பட்டதன் பின்னர் அவருக்கு ஒட்சிசன் வழங்கப்படுவதற்கு பதிலாக காபனீரொட்சைட் வாயு வழங்கப்பட்டமையால் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் கவனக்குறைவால் ஏற்பட்டுள்ளதா அல்லது ஒட்சிசன் சிலிண்டர் மாசடைந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வைத்தியசாலையில் குறைபாடு
அத்துடன், கொழும்பு - நுகேகொடை பகுதியில் வசிக்கும் 61 வயதான பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மேலும், வைத்தியசாலையின் பராமரிப்பு சேவையில் உள்ள குறைபாட்டையே இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |