3 வயது சிறுமியை தொடருந்து பாதையில் தள்ளிவிட்ட பெண்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் (காணொளி)
அமெரிக்காவில் ஓரிகான் தொடருந்து நிலையத்தில் மூன்று வயது சிறுமியை ரயில் பாதையில் தள்ளிவிட்ட 32 வயது பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த மூன்று வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென தொடருந்து பாதையில் தள்ளிவிட்ட அதிர்ச்சி சிசிடிவி காணொளிகள் அனைவரையும் திகிலடைய வைத்துள்ளது.
அந்த காணொளியில் சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென எழுந்து கீழே உள்ள தண்டவாளத்தில் குறித்த சிறுமியை தள்ளிவிடுவது பதிவாகியுள்ளது.
தள்ளிவிட்ட பெண் கைது
தொடருந்து பாதையில் விழுந்த சிறுமியின் முகம் தண்டாவளத்தில் இடித்தது, நல்ல வேளையாக அங்கிருந்தவர்களில் ஒருவர் அடுத்த தொடருந்து வருவதற்குள் சிறுமியை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதில் சிறுமியின் தலையில் வலியும், நெற்றியில் இரத்தம் கசிவதற்கான சிவப்பு குறி காணப்பட்டது.
A 32-year-old Brianna Lace Workman arrested for shoving a 3-year-old child onto train tracks. Motives unknown except, Democrat hell-hole of Portland, Oregon. pic.twitter.com/w63DGDdCOL
— ??RealRobert?? (@Real_RobN) December 31, 2022
இந்த சம்பவத்தை தொடர்ந்து 32 வயதான ப்ரியானா லேஸ் வொர்க்மேன் என்ற பெண் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
