புதிய காதலனை திருமணம் செய்ய பழைய காதலனுடன் தேனிலவு சென்ற யுவதி
23 வயதான யுவதியொருவர் தனது புதிய காதலனை திருமணம் செய்து கொள்வதற்காக தனது பழைய காதலனான 24 வயதான இளைஞனிடம் அனுமதி பெறச் சென்று 03 நாட்களை அவருடன் கழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புளத் சிங்களவில் இடம்பெற்றுள்ளது.
யுவதியின் தாயார் தனது மகள் காணாமல் போயுள்ளதாக நேற்று புலத்சிங்கள காவல் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்தத் தகவல் அனைத்தும் தெரியவந்துள்ளதாக புலத்சிங்கள காவல்துறையினர் தெரிவித்தனர்.
துண்டிக்கப்பட்ட காதல் உறவு
புலத்சிங்களவை வசிப்பிடமாகக் கொண்ட இந்த யுவதி, புலத்சிங்களவில் வசிக்கும் இளைஞன் ஒருவரை சில காலமாக காதலித்துள்ளார். சில காலங்களுக்குப் பிறகு, அந்த உறவு துண்டிக்கப்பட்டு, மற்றொரு பகுதியில் வசிக்கும் 27 வயது இளைஞனுடன் இளம் பெண் காதல் உறவைத் தொடங்கினார், அதற்கு இரு தரப்பினரும் சம்மதித்த நிலையில், இளம் பெண் திடீரென தனது வீட்டை விட்டு காணாமல் போனார்.
இவர்களுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. மகள் காணாமல் போனது குறித்து அவரது தாயார் புலத்சிங்கள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகவும், மூன்று நாட்களுக்கு பின்னர் யுவதி வீடு திரும்பியதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை விசாரணை
தாயின் முறைப்பாட்டின் பிரகாரம், புலத்சிங்கள காவல் நிலைய பிரதான காவல்துறை பரிசோதகர் சந்தன விதானகே நடத்திய விசாரணைகளுக்காக யுவதியை அழைத்துள்ளார்.
இதன்படி பழைய காதலனையும் புதிய காதலனையும்காவல் நிலையம் வரவழைத்து நீண்ட விசாரணையின் பின்னர் புதிய காதலன் யுவதியை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்ததையடுத்து சம்பவம் சுமுகமானதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
