படகில் இருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Sumithiran
கல்கிஸை காவல் பிரிவின் இரத்மலானை பகுதி கடற்கரையில் கைவிடப்பட்ட மீன்பிடி படகில் இருந்து இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று (25) மதியம் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
கல்கிஸை காவல்துறையினர் மேலதிக விசாரணை
அந்தப் பெண் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பெண் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்திருப்பது தெரியவந்துள்ளதாகவும், கல்கிஸை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |