யாழில் பெருமளவு கசிப்புடன் பெண் ஒருவர் கைது!
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Kajinthan
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பெருமளவு கசிப்புடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏழாலை தெற்கு, மயிலங்காடு பகுதியில் வைத்து நேற்றிரவு (22) 42 வயதுடைய குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அந்தப் பெண்ணிடமிருந்து 10 ஆயிரம் மில்லிலீற்றர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த பெண் நீண்ட காலமாக கசிப்பு விற்பனையில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்றிரவு சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாக குறிப்பிடப்படுகின்றது.
விசாரணைகளின் பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி