விகாரைக்குள் திருட்டு: இரு பெண்கள் கைது
கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவமானது புதன்கிழமை(13) மதியம் 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வாழைத்தோட்ட காவல் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களான பெண்கள் இருவரையும் கைது செய்து வாழைத்தோட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
விகாரை
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் விகாரைக்குள் நுழைந்த பெண் உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை பொதிசெய்து மற்றுமொரு பெண்ணிடம் கொடுத்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை 9 மணி நேரம் முன்
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா!
5 நாட்கள் முன்