வங்கிகளிலும் நாளை வேலை நிறுத்த போராட்டம்!!
Go Home Gota
Commercial Bank
The Bank of Ceylon
Sri Lanka Economic Crisis
SL Protest
By Kanna
இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மற்றும் பல தொழிற்சங்கங்களும் நாளை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன.
வேலை நிறுத்தப் போராட்டம் காலை 10.00 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை வங்கி ஊழியர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கியும் வேலைநிறுத்தம் காரணமாக அதன் சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவை அறிவித்துள்ளது.
அரசு, பொது மற்றும் தோட்டத் துறைகளைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில் வங்கித் துறைகளும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி