மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு
கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களுக்கான மூன்று நாள் செயலமர்வு மட்டக்களப்பு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த மூன்று நாள் செயலமர்வானது கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை,மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பிரதேசத்தில் கடமையாற்றும் ஊடகவியலாளர்களை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சிறுவர் உரிமை
அறிக்கையிடும் போது ஊடகவியலாளர்கள் சிறுவர் உரிமைகளை புரிந்து கொள்வது, அறிக்கை இடுவதற்கான அணுகுமுறை, சிறுவர் தகாதமுறைக்குட்படுத்தலின் வடிவம் மற்றும் அதனை அறிக்கையிடும் போது பின் பின்பற்ற வேண்டிய ஒழுக்கமுறை, சிறுவர் வன்முறைகள் தொடர்பாக அதனை எதிர்த்து புகாரளித்தல், சட்ட நடவடிக்கை எடுக்கும் நெறிமுறைகள் மற்றும் சிறுவர் தகாதமுறைக்குட்படுத்தப்படுத்தல் தொடர்பில் நேர்காணல்களின் போது ஊடகவியலாளர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் போன்ற தலைப்புகளில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், மூன்று நாள் பயிற்சி பட்டறைக்கு வளவாளர்களாக PEaCE/ECPAT இலங்கை அமைப்பின் நிறைவேற்று இயக்குனர் எம்.மகரூப், வைத்தியர் எம்.சி.றஸ்மின்,குறித்த நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ஆர். நதியா மற்றும் தொடர்பாடல் உதவியாளர் பி.கௌசல்யா ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும், UNICEF அமைப்பின் அனுசரணையில் "PEaCE/ECPAT Sri Lanka' வின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |