இந்தியா - பாகிஸ்தானை சமமாக பார்க்கும் சகாப்தம் முடிவு
இந்தியாவையும் பாகிஸ்தானையும் சமமாக பார்க்கும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
தெற்காசிய பிராந்திய ரீதியாக இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது எனவும் இந்தப் பிராந்தியத்தில் முதன்மை சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம்
வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் வழிபாடுகளில் ஈடுபட்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை பார்வையிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ்.ஜெய்சங்கர், அண்டை நாடுகளை, எல்லை தாண்டிய பயங்கரவாதம் மூலம் கையாளலாம் என நினைப்பதால், சார்க் அமைப்பு செயற்படாதுள்ளதாக பாகிஸ்தானை மறைமுகமாக சாடியுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்காத நாடுகள் உள்ளன எனச் சுட்டிக்காட்டியுள்ள எஸ்.ஜெய்சங்கர், குறித்த நாடுகள் இந்தப் பிரச்சினையில் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்வதாக கூறியுள்ளார்.
இந்தியாவின் எழுச்சி
இந்தியா ஒரு சுதந்திர சக்தியாக இருக்கும் பட்சத்திலேயே உலக நாடுகள் மதிக்கும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் எழுச்சியை உலகமே இன்று உற்று நோக்கிவருவதாகவும் அதற்கு வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பும் வெற்றிகளும் ஒரு காரணம் எனவும் எஸ்.ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களை கவனித்துக் கொள்ளும் கடமையும் பொறுப்பும் தமக்கு உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
