உலகின் அதிக வெப்பமான மாதம் எது தெரியுமா!
உலகின் அதிக வெப்பமான மாதமாக 2024 ஆம் ஆண்டின் பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்துள்ளது.
அத்துடன், மாதாந்த வெப்பநிலை பதிவுகளில் தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக வெப்பம் உச்சத்தை தொட்டுள்ளது.
மனிதன் அதிக அளவு புதைபடிவ எரிபொருளை எரிக்க ஆரம்பித்த தொழில்துறைக்கு முந்திய காலத்தை விடவும் சுமார் 1.77 செல்சியஸ் வெப்பம் கடந்த பெப்ரவரியில் பதிவாகியுள்ளது.
அதிகரிக்கும் வெப்பநிலை
கடந்த 2023 ஜூன் மாதம் தொடக்கம் ஒவ்வொரு மாதமும் வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
உலகின் கடல் மேற்பரப்பின் வெப்பம் சாதனை அளவுக்கு பதிவாகி இருப்பதோடு அன்டார்டிகாவின் கடல் பனி கடுமையாக குறைவடைந்துள்ளது.
எல் நினோ காலநிலை நிகழ்வு வெப்பம் அதிகரிப்பதற்கு காரணமாக இருந்த போதும் மனித செயற்பாட்டால் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் இதற்கு பிரதான காரணியாக உள்ளது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |