5,000 ஆண்டுகள் கடந்து நிற்கும் உலகின் ஆக வயதான மரம்..!
சிலி நாட்டில் 5,000 ஆண்டுளுக்கு மேற்பட்ட வயதைக்கொண்ட மரம் உள்ளது.
'முப்பாட்டன்' என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மரம் உலகின் ஆக வயதான மரம் என்ற அங்கீகாரத்தைப் பெறவுள்ளது.
Fitzroya cupressoides எனும் இனத்தை சேர்ந்த இந்த மரத்தின் உயரம் 28 மீட்டர், இதன் நடுத்தண்டின் விட்டம் 4 மீட்டர்களாகும்.
வயதான மரம்
சிலி தலைநகர் சாண்டியகோவில் (Santiago) இருந்து 800 கிலோமீட்டர் தொலைவில் லோஸ் ரியோஸ் (Los Rios) எனும் இடத்திலுள்ள காட்டில் இந்த மரம் காணப்படுகின்றது.
இந்த மரத்தைப் பார்ப்பதற்கு அண்மைய ஆண்டுகளாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக கூறப்படுகின்றது.
பூமியின் பருவநிலை மாற்றங்கள் பலவற்றை கடந்து வந்தமைக்கான அடையாளங்கள் மரத்தில் மறைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
நடுத்தண்டில் உள்ள வளையங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வறட்சி, மழை, நிலநடுக்கம், தீ போன்ற இயற்கை இடர்களின் தாக்கத்தினை காண முடிகின்றது.
இதேவேளை, தற்போது கலிபோர்னியா (California) மாநிலத்தில் உள்ள 4,850 ஆண்டுகள் வயதுடைய Great Basin bristlecone pine இன மரம் ஆக வயதானதாகக் கருதப்படுகிறது.
