உலக சனத்தொகை இன்றுடன் 800 கோடி..! ஐ.நா வெளியிட்டுள்ள புதிய தகவல்
இன்றுடன் உலக மக்களின் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
அதேவேளை, மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்திவிடும் என ஐ நா தெரிவித்துள்ளது.
கொரோனாதொற்று காரணத்தால் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் மக்கள் தொகை பெருக்கம் ஒரு விழுக்காட்டிற்கு குறைவாக பதிவானது.
இந்நிலையில், இன்றுடன் (15) உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்பு நடத்திய ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.
உலக மக்கள் தொகை தினம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 ஆம் திகதி உலக மக்கள்தொகை தினமாக கடைப்பிடிக்கப்படுறது.
இந்த ஆண்டு மக்கள் தொகை தினத்தன்று ஐநா சபை வெளியிட்ட அறிக்கையின்படி நம்பர் பதினைந்தாம் திகதியோடு உலகின் மக்கள் தொகை 800 கோடியை தொட்டுவிடும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்னும் சிறப்பை பெற்றுள்ள சீனாவை இந்தியா 2023 ஆம் ஆண்டு மக்கள் தொகையில் பின்னுக்கு தள்ளிவிட்டு மக்கள் தொகையில் முதலிடத்தைப் பிடித்துவிடும் என்றும் ஐநா கணித்துள்ளது.
அதோடு வரும்காலத்தில் உலகின் மக்கள் தொகை பெருக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்கிற கணிப்பையும் ஐநா சபை வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 2030 ஆம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 850 கோடியை தாண்டிவிடும் என்றும், 2050ஆம் ஆண்டு உலகின் மக்கள் தொகை 950 கோடியை தாண்டிவிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்மறையான மக்கள் தொகை பெருக்கும்
காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான் பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் தொகை பெருக்கம் அதிரித்திருக்கும் என்றும், ஆசியாவின சில நாடுகள்,லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவு நாடுகளில் மக்கள் தொகை பெருக்கும் எதிர்மறையாக இருக்கும் எனவும் ஐநா அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்து விடும் என்பதால் மக்கள் தொகைப் பெருக்கத்தில் சுணக்கம் ஏற்படும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.
மக்கள் தொகை பெருக்கத்தால் உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள் தொகை அதாவது 25 முதல் 64 வயதுவரையிலான மக்கள் தொகை அதிகம் இருக்கும் எனவும், இதனால் பொருளாதாரம் உயர்ந்து தனி மனித வருவாயும் அதிகரிக்கும் என்றும் ஐநா கணித்துள்ளது.
இது நம்முடைய பன்முகத்தன்மையை கொண்டாடும் நேரம் என ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.